மதுரை கிரைம் செய்திகள்:

மதிச்சி யத்தில்
வீடு புகுந்து செல்போன் நகை திருட்டு
2 பேர் கைது:

மதுரை அக் 18:

மதிச்சியத்தில் வீடு புகுந்து செல்போன் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதிச்சியம் நடுத் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் ரஞ்சித் 27 .இவர் வீடு புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் வைத்திருந்த செல்போன் இரண்டு ,கடிகாரம் ஒன்று, தங்க நகை என்று நினைத்து கவரிங்செயின்ஒன்று முதலியவைகளை திருடிச்சென்றுவிட்டனர்.இதன் மொத்த மதிப்பு 36 ஆயிரத்து 550 ஆகும். இந்த திருட்டு தொடர்பாக ரஞ்சித் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முத்துக்குமார் மகன் சுந்தரபாண்டி 22 ,நரிமேடு சாலை முதலியார் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார்20,அகிம்சாபுரம் ஏழாவதுதெருவை சேர்ந்த பிரேம்குமார்20 இவர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ராஜகுமாரையும் பிரேம்குமாரையும் கைது செய்தனர். தலைமறைவான சுந்தரபாண்டியைதேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் ,ஒரு கடிகாரம், கவரிங் செயின்ஒன்று முதலியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
*******************************
நரிமேட்டில்
செல்போன் கடையை உடைத்து கொள்ளை
போலீஸ் விசாரணை:

மதுரை அக் 18 :

நரிமேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நரிமேடு சுல்தான் நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் வளர்மதி 44. இவர் நரிமேடு மெயின்ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்ற அவர் மறுநாள் கடைக்கு வந்து பார்த்தபோது கடை உடைக்கப்பட்டிருந்தது. கடையில் வைத்திருந்த டேப்லெட் 1 செல்போன் 1பட்டன் செல்போன்கள் 25 முதலியவற்றை ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வளர்மதி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
***********************************
கூடல்புதூரில்
சமையல் செய்தபோது தீப்பிடித்து இளம்பெண் பலி:

மதுரை அக் 18:

கூடல்புதூரில்வீட்டில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் கருகி பலியானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
ஆனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துவீரன் மனைவி பிரியா30. இவர் சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் சேலையில் தீப்பிடித்து தீயில் கருகினார். அவரை ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********************************
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தஊழியர்
வேலை செய்தபோது பள்ளத்தில் தவறி விழுந்து பலி:

மதுரை அக் 18 :

வேலை செய்து கொண்டிருந்த போது பள்ளத்தில் தவறி விழுந்த ஒரிசாவை சேர்ந்த ஊழியர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரிசா மாநிலம் கஞ்சம் தாலுகா கைராசி என்ற ஊரைச் சேர்ந்தவர் அபிமனியூஸ்வின் 36 .இவர் இந்தியன் பேங்க் காலனிபாரதியார் தெரு சந்திப்பில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால்தவறிமேலிருந்து கீழேவிழுந்தார். அவர்விழுந்த போது அங்கிருந்த பள்ளத்திற்குள் விழுந்து விட்டார் .இதில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து அய்யர்பங்களா காந்திநகர் மூன்றாவதுதெருவைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கொடுத்த புகாரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*****************************
நீண்ட நாள் வயிற்று வலியால் அவதி
பெண் தூக்குப்போட்டு தற்கொலை:

மதுரை அக் 18 :

விளாச்சேரி வேளாளர் தெருவை சேர்ந்தவர் சந்திரவதனம்56 .இவர் பொம்மை கம்பெனி உரிமையாளர் ஆவார். அவர் தொடர்ந்து நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சந்திரவதனம் பொம கம்பெனியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
****************************
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில்
மயங்கி விழுந்தவர் பலி:

மதுரை அக் 18:

திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் வழியாகச் சென்றவர் திடீரென்று மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து, திருப்பரங்குன்றம் வி.ஏ.ஓ திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்துபிணத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர் .விசாரணையில், இறந்தவர் பெயர் சதீஷ்குமார் 50 என்று தெரியவந்தது .அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர். கோயிலுக்கு வந்தவரா எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
************************-
ஜெய்ஹிந்துபுரத்தில்
அளவுக்கு அதிகமாக மாத்திரைகளைத் தின்ற பெண் சாவு :

மதுரை அக் 18:

ஜெய்ஹிந்துபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி 55 .இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் .உயிருக்குஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.****
*********************************
.. பீபிகுளத்தில் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்
4பேர் கைது:

மதுரை அக் 18 :
மதுரை,
பீபி குளத்தில் முன்விரோதத்தில் இரண்டு தரப்பினர் மோதிக்கொண்டதில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பீ.பீ.குளம் இந்திரா நகர் முதல் தேர்வை சேர்ந்தவர் சிவகுமார் மகன் கார்த்திக் 19 .பீ.பி.குளம் பி.டி.ராஜன் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் 35. இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பீபிகுளம் இந்திரா நகர் 2வது தெரு வழியாகச் சென்ற கார்த்திகை வழிமறித்த சரவணன் உள்பட 5 பேர் கார்த்திக்கை சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து கார்த்திக் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை 35 கைது செய்தனர்.இந்த தாக்குதலின்போது, கார்த்திக் தரப்பினர் ஏழுபேர் பதில்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மகாலட்சுமி மகாலெட்சுமி என்பவர் கொடுத்த புகாரில் கார்த்திக் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாலாஜி ,ரமேஷ் ,ஜெகதீஸ் ,ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
******************************
திருநகரில்
முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் கத்தியால் வெட்டு
2 பேர் கைது :

மதுரை அக்18:

திருப்பரங்குன்றம் ஆர்.வி‌ பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கேசவன் 18. திருநகர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் ஆக்னெஸ்ஷ் மணி என்ற மணி .இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கார்த்திக் நண்பர் நாகாஷ்நவீனுடன் ஆர்.வி.பட்டி பூங்கா அருகே சென்றுகொண்டிருந்தார். அவர்களை ஆக்னெஸ்ன் மணி உள்பட 4 பேர் வழிமறித்து அரிவாளாலும் கத்தியாலும் வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் கேசவனும் ,நாகாஸ்நவீனும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கேசவனின் தந்தை ராஜேந்திரன் திரு நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆக்னஸ் மணி என்ற மணி, கட்டாரி என்ற அஜய் இருவரையும் கைது செய்தனர் கௌதம், ஆனந்த் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: