பிரதோஷ விழா: சுவாமி- அம்பாள் உலா:

சோமவாரபிரதோஷ விழா:

மதுரை:

மதுரை மாவட்டத்தில் பல கோயில்களில் சோமவார பிரதோஷ விழாவானது, வெகு சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயங்களில், சோமவார பிரதோஷத்தையொட்டி, சிவன் மற்றும் நந்திகேஷ்வரனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதையடுத்து, ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் கோயில் வளாகத்தில், உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாட்டை, ஆலய நிர்வாக அதிகாரி இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: