சோழவந்தான் அருகே அதிமுக பொன்விழா: இனிப்ப ு வழங்கிய ஜெ பேரவையினர்:

அதிமுகவின் 50 -வது பொன்விழா ஆண்டு: மன்னாடி
மங்களத்தில் கொண்டாடப்பட்டது:

சோழவந்தான்:

அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி
மங்கலத்தில் அம்மா பேரவை சார்பில், அதிமுக கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதிமுக நிர்வாகி பேச்சு கருப்பு, கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு ,பால் முதலியார் தலைமை தாங்கினார். ஜானகிராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செல்லம் வீரபாண்டி சக்திவேல் அழகு தங்கசாமி முத்துவேல் போத்தி பாண்டி பாலு முதலியார் சிவானந்தம் வண்டிக்கார கருப்பு மற்றும் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஏற்பாடுகளை, அம்மா பேரவை செயலாளர் ராஜபாண்டி செய்திருந்தார். இதேபோல் ,மதுரை மேற்கு ஒன்றியம் தேனூரில், அதிமுகவின் 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கிளைக் கழகம் சார்பாக கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், வாடிப்பட்டியில் அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் தலைமையில், வாடிப்பட்டி பேருந்து நிலையத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு, கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதில், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: