மதுரையில், இயலதோருக்கு உணவு வழங்கிய அமைச ்சர்:

இயலாதவர்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர் மூர்த்தி:

மதுரை:

மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, இயலாதவர்களுக்கு உணவு வழங்கும் 164- நாள் நிகழ்ச்சியை, தொடங்கிவைத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி உணவுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியை, அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தொகுத்து வழங்கினார் . இந்நிகழ்ச்சிக்கு, மங்கையர்கரசி மில்ஸ் சேர்மன் மு. கண்ணப்ப செட்டியார் தலைமை வகித்தார்.
வழக்கறிஞர் வி.ராமகிருஷ்ணன், ஆடிட்டர் சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதவா ,நந்தினி ரியல் எஸ்டேட் பிரபு, எஸ் வி எஸ். கடலை மாவு நிறுவனர் சுரஜ் சுந்தர சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சாஸ்தா அப்பளம் மணிகண்டன், மதிமுக மாவட்டச் செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான புதூர் மு. பூமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏழை எளியோர்க்கு ஊனமுற்றோர் ஆதரவற்ற ஏழை எளியோர்க்கு அமைச்சர் மூர்த்தி உணவு பொட்டலங்களை வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மதுரை அட்சய பாத்திரத்தைக் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: