மேலூரில், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மௌன அஞ்சலி:

உத்தரபிரதேசத்தில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியாளருக்கு
மேலூரில் மெழுகு ஏற்றி வைத்து மெளன அஞ்சலி

மேலூர் :

உத்தரபிரதேசத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து,போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 விவசாயிகள் கார் ஏற்றி படு கொலை, செய்யப்பட்டனர்,மேலும் அங்கு செய்தி கேகரித்துக் கொண்டிருந்த ராமன் கெளஸ்யப் என்ற செய்தியாளர் ஒருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்,இந்த சம்பவத்தை கண்டித்தும்,அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மதுரை மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக மெழுகு வர்த்தி ஏற்றிவைத்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: