மதுரை மாவட்டத்தில், சிறப்பு குடும்ப நலத்திட்ட முகாம்: சுகாதாரத் துறை துணை இயக்குநர் தகவல்:
மதுரை:
மதுரை மாவட்டத்தில், மகப்பேறு இறப்புக்களை தடுக்கும் நோக்குடன், 31.12.21.வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என, மதுரை மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் லதா தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொழிலாளர் அரசினர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் ஆகியவற்றில், தகுதி வாய்ந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு, நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சை மற்றும் தாற்காலிக குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது என்றார்.