மதுரை அருகே பதிவுத்துறை முகாமில் மக்கள் குறைதீர்க்கும் நாள்:

பதிவு குறைதீர்க்கும் முகாமினை,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி
துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்:

மதுரை:

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ராஜகம்பீரத்தில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவுத்துறை சார்பில் பதிவு குறைதீர்க்கும் முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி, துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி 50 மாவட்டங்களில் உள்ள பத்திரப்
பதிவுத்துறையிலும், 9 சார்பதிவாளர் அலுவலங்களிலும் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை பதிவுத்துறையின் குறைதீர்க்கும் முகாம் கூட்டம் இன்று முதல் நடைபெற்று வருகிறது. மனுதாரரின் மனுக்களை பெற்று உடனடியாக தீர்வுகாண கூடிய வகையில் இன்றைக்கு முதன் முதலாக மதுரை மாவட்டத்தில் திருமோகூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5 சார்பதிவாளர் அலுவலகத்தின் சார்பில் இந்த முகாமினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட மக்கள் எல்லாம் அவர்களுக்கு தேவையான சிறு, சிறு குறைகளை
யெல்லாம் மனுவாக வழங்கி இருக்கின்றனர்.
பத்திரபதிவுத்துறை அலுவலத்திற்கு வரும் பொதுமக்கள் எளிமையாக பதிவதற்கு ஏற்றமுறையில் பல்வேறு மாற்றங்களை, தமிழ்நாடு முதலமைச்சர், பத்திரப்
பதிவுத்துறையில் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், பத்திரப்
பதிவுத்துறையில் பதிவுப்பெற்றுள்ள மனுக்களின் மீது இருக்கக்கூடிய குறைகளையும் நீக்குவதற்காகத்தான் குறைதீர்க்கும் முகாம் கூட்டம் தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலத்திற்கு உட்பட்ட மாவட்ட அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
வில்லங்க மனுக்கள், வாரிதாரர் மனுக்கள் மற்றும் உயில் மனுக்கள் அதிகமாக அளவில் வரப்பெற்றுள்ளது. பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும். இன்றைக்கு பெறக்கூடிய மனுக்களில் வில்லங்கம் சம்பந்தமான மனுக்கள் வரப்பெற்றிருந்தால் அந்த மனுக்களுக்கு இன்றைய தினமே தீர்வு காணப்படும். சிக்கலாக இருக்கின்ற மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு முடிக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. மக்களின் குறைபாடுகளை சரிசெய்வதற்காக மேலும் 50 சார்பதிவாளர் அலுவலகங்கள் கூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் பிரிக்கப்பட்டு பல ஆண்டுகாலம் ஆகின்றது. அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய 15 ஊராட்சிகள் இதுவரை மதுரை வடக்கு
தாலுகாவிற்கு உட்பட்டிருந்தது. தற்பொழுது, திருப்புவனம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதைப்போல், மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளெல்லாம்,
சிட்டம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்டிருந்தது. தற்பொழுது, அந்த பகுதிகளெல்லாம் மேலூர் தாலுகாவிற்கே மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. வடக்கு தாலுகாவில் இருந்த சில கிராமங்கள் வாடிப்பட்டி தாலுகாவிற்கு மாற்றப்படும்.
வடக்கு தாலுகாவில் உள்ள சார்பதிவாளருக்கு திருப்பரங்குன்றத்தில் சொத்துக்கள் உள்ளன.
அந்த மனுக்களை
யெல்லாம் ஆய்வு செய்து அந்தந்த பகுதியிலே அந்தந்தந்த தாலுகாவிலே அந்த ஊராட்சிகளிலே மக்கள் போக்குவரத்திற்கு வசதியாக மாற்றப்படும்.
பத்திரப்
பதிவுத்துறையில், பதிவு செய்த உடனே பட்டா மாறுதலுக்கு தாலுகா அலுவலகத்திற்குதான் செல்ல வேண்டும். தாலுகா வாயிலாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உடனடியாக மாற்றம் செய்வதற்கு வசதியாக இருக்கும். வடக்கு தாலுகாவில் இருக்கக்கூடிய சொத்துக்கள் 3, 4 சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும். இதுபோன்று இல்லாமல் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டிற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பத்திரப்
பதிவுத்துறையில் தற்பொழுது, போலிப்பதிவுகள் மிக மிக குறைந்துள்ளன. கோவில் நிலங்களையும் அரசுக்கு சொந்தமான நிலங்களையும் மற்றும் மசூதிக்கு சொந்தமான இடங்களையும் இனி பதிவு செய்ய முடியாது என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி தெரிவித்தார்.
முன்னதாக,
மேலூர் அரசு மருத்துவமனை, வாடிப்பட்டி அரசு மருத்துவமனை, மற்றும் திருமங்கலம் அரசு மருத்துவனைகளில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜன் பிளாண்ட் நிறுவனத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்
ஆ.வெங்கடேசன் மாவட்ட வருவாய் அலுவலர்
கோ.செந்தில்குமாரி இணை இயக்குநர் (சுகாதாரம்)
வெங்கடாசலம் துணைப்
பதிவுத்துறை தலைவர்
மு.ஜெகதீசன், உதவிப்
பதிவுத்துறைத் தலைவர்
இரா.ரவீந்திரநாத், சார்பதிவாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: