நடிகர் பாலாஜி தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கி அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு மேற்கொண்டார்:
மதுரை:
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதன் ஒரு பகுதியாக இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், நடிகர் தாடி பாலாஜி தனது மகளின் (பூசிகா)பிறந்தநாளை முன்னிட்டு.
மதுரை நத்தம் சாலையில் உள்ள திருப்பாலை பகுதியில், மதுரை மாநகராட்சி வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதியில் ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை உணவு வழங்கி கொரோனா அவசியத்தையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வை மேற்கொண்டார்.
ஆதரவற்ற முதியோரிடம் பேசிய,
நடிகர் பாலாஜி தமிழக முதல்வர் தற்போது, கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நாமும் ,நமது உயிரை பாதுகாத்துக் கொள்ள சமூகத்தை பாதுகாக்க அனைவரும் இந்த கொரானா தொற்று தடுப்பூசி முகாம் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள் வைத்தார்..