மதுரை நகரில் நடந்த குற்ற செய்திகள்:

உத்தங்குடியில்
மருத்துவமனை அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு:
போலீஸ் விசாரணை:

மதுரை அக் 9:

மதுரை
உத்தங்குடியில், மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .
சிவகாசி விஸ்வநாத புரத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் 63.இவர் ,உத்தங்குடி யிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அவர் மருத்துவமனை அருகே நடந்து சென்ற போது, சுமார் 25 லிருந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, கண்ணம்மாள், கே .புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.

செல்லூரில்,
கத்திமுனையில் வழிப்பறி:
மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது :

மதுரை:

மதுரை
செல்லூரில், கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்லலூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் காந்தி55. இவர் நரிமேடு பி.டி.ராஜன் ரோடு வழியாக சென்றார். அப்போது, 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் 500 ஐ பறித்து சென்று விட்டனர். .இந்த சம்பவம் குறித்து, காந்தி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, உத்தங்குடி மங்கல குடியைச் சேர்ந்த அழகர்சாமி 30 உள்பட 3 சிறுவர்கள் சேர்த்து 4 பேரை கைது செய்தனர்

பைபாஸ் ரோட்டில்
நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி:

போலீசார் விசாரணை:

மதுரை:

மதுரை அருகே நாகனாகுளம் எம் எம் எஸ் காலனி எட்டாவது தெருவை சேர்ந்தவர் சாமிநாதன்42. இவர் பைபாஸ் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடந்து சென்றபோது, மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து ,மனைவி வீரலட்சுமி எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.
போலீசார், சுவாமிநாதன் சாவு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடக் குளத்தில்
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை:

பெட்டிக் கடைக்காரர் கைது:

மதுரை:

மதுரை
மாடக்குளம் பெரியார் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 58.இவர், இதே முகவரியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இவர் இந்த பெட்டி கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் 193, புகையிலை பொருட்களை கைப்பற்றி கடை உரிமையாளர் விஜயகுமாரை கைது செய்தனர்.

மதுரையில்
கால்டாக்சி உரிமையாளர் உள்பட 2 பேரை வழிமறித்து மிரட்டி
பணம் பறித்த ரவுடி கைது:

மதுரை:

மதுரையில், இரு வேறு சம்பவங்களில் கால்டாக்சி உரிமையாளர் மற்றும் கார் கம்பெனி ஊழியரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கப்பலூர் உச்சப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் 41. இவர் கால் டாக்சி ஓட்டி வருகிறார். இவர் மதுரையிலிருந்து திருச்சிக்கு செல்வதற்காக பெருங்குடி மூன்று புளியமரம் அருகே சென்ற போது அவரை வழிமறித்த கருவேலம்பட்டி நடு தெருவைச் சேர்ந்த கரந்தமலை 30 என்பவர் இவரை மிரட்டி இவரிடமிருந்து ரூபாய் 1500 ப றித்தி சென்றுவிட்டார். இவரைப்போல ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்.இவர் கப்பலூரில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்‌ இவரை திருமங்கலம் ரோட்டில் வழிமறித்த கரந்தமலை அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து விட்டார். இந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பாக சீனிவாசன் பெருங்குடி காவல் நிலையத்திலும் ஹரிஹரன் ஆஸ்டின்பட்டி போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தமலையை கைதுசெய்தனர் .
இவர்மீது ,மதுரை திருநெல்வேலி உள்பட 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கலத்தில்
கோயில் உண்டியலை உடைத்து
20 ஆயிரம் கொள்ளை:

மதுரை:

திருமங்கலத்தில் கோயில் உண்டியலை உடைத்து ரூபாய் 20 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். .திருமங்கலம் தாலுகா, டி. புதுப்பட்டியில் வெங்கடம்மாள்அழகர்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக ரெங்கசாமி என்ற சங்கத்தேவன் உள்ளார்.
அவர் வழக்கம்போல ,பூஜை செய்துவிட்டு கோவில் நடை சாத்தி விட்டு சென்றார். பின்னர், மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. சாமி முன்பாக வைக்கப்பட்டிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது .
அதில் இருந்த ரூபாய் 20 ஆயிரத்தை ,மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் .இந்த சம்பவம் குறித்து ,பூசார் ரெங்கசாமி திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: