உசிலம்பட்டி, கல்லூரியில் சர்வதேச கருத்த ரங்கு:

*உசிலம்பட்டி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு.*

உசிலம்பட்டி :

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் கணிதத் துறையின் சார்பாக இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன் பொருளாளர் வனராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் சுபாஷ் வரவேற்று பேசினார்.
முதல்வர் ரவி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். முதல் நாள் அமர்வில் சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் பாஸ்கர் பாபுஜி, துருக்கி உளுடாக்
பல்கலைக்கழகப் பேராசிரியர் இஸ்மாயில் நாசி கான்குல், கேரளா பல்கலைகழகப் பேராசிரியர் சுரேசிங், காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் மகாதேவன். இரண்டாம் நாள் அமர்வில் ஓமன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவஞானம், வேலூர் வி.ஐ.டி பேராசிரியர் ஜெகதீஷ்குமார், பஞ்சாப் பாட்டியாலா பல்கலைக்கழகப் பேராசிரியர் சத்ய பீர் சிங், நார்வே ஓஷ்லோ பல்கலைக்கழகப் பேராசிரியர் தேவராஜ் நாராயணப்பா ஆகியோர் கருத்துரையாளர்களாக கலந்துகொண்டனர். பல்வேறு பல்கலைக்கழக கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கட்டுரையை சமர்பித்து பேசினர். தேனி மார்க்கெட் கமிட்டி இளநிலை கண்காணிப்பாளர் ஆனந்த கார்த்திகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் பொன்ராம், பேராசிரியர்கள் சூரியராஜன், சுந்தரராம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். உதவி பேராசிரியர் மார்கரட் காருன்யா நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கணித துறை பேராசிரியர்கள் ரேணுகா தேவி, சிவசங்கரி, ரமேஷ்பாண்டி, ராஜாகலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை உதவி பேராசிரியர் சூர்யா நாக பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: