மீனாட்சி மிஷன் மருத்துவமணை சாதனை

*மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் லேப்ராஸ்கோப்பி மூலம் வலது அட்ரீனல் சுரப்பியின் மிகப்பெரிய பியோக்ரோமோசைட்டோமா அகற்றல*

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் லேப்ராஸ்கோபிக் மூலம் வலது அட்ரீனல் சுரப்பியின் மிகப்பெரிய பியோக்ரோமோசைட்டோமா என்னும் ச திசுகட்டியை ஆற்றுவதற்கு லேப்ராஸ்கோபிக் செயல்முறையை சமீபத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்திருக்கிறது. ஊடுருவல் அறுவை சிகிச்சை செயல்முறையான இது லேப்ராஸ்கோபிக் அட்ரினாலெக்டமி என அறியப்படுகிறது. தென்காசியை சேர்ந்த 12 வயதான ஒரு சிறுமிக்கு அவளது வலது அட்ரீனல் சுரப்பியில் 14*10 சென்டிமீட்டர் அளவுள்ள திசுக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்க இந்த செயல்முறையை மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி குடல் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் ரமேஷ் அர்த்தனாரி தெரிவிக்கையில் இந்த திசுக்கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சை செயல்முறையை இந்தியாவிலோ அல்லது உலக அளவில் வேறு எங்குமே தெரிந்த வரையில் யாரும் இதுவரை மேற்கொண்டதில்லை நோயாளிகளின் வயதை கருத்தில் கொள்கிற போது லேப்ராஸ்கோபிக் செயல்முறையானது பொருத்தமான அணுகுமுறையாக இருக்கிறது .ஏனெனில் இதில் மிகச்சிறிய தழும்பே இருக்கும். மேலும் நோயாளி இதிலிருந்து மீண்டு விரைவாக குணமடையலாம்

அடிவயிற்றில் வலி யோடு இந்த நோயாளி முதலில் வரும் போது அவருக்கு வயிற்றில் எம்ஆர்ஐ சோதனை செய்யப்பட்டது சிறுநீரகத்திற்கு மேலே உள்ள அட்ரினல் சுரப்பியில் திசு திரள் இருப்பது காணப்பட்டது. அச்சிறுமிக்கு வலி நிவாரணிகள் மற்றும் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வலியிலிருந்து மீண்ட நிலையில் சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .மீண்டும் மலச்சிக்கல் காரணமாக அனுமதிக்கப்பட்டர் அப்போதுதான் அந்த சிறுமிக்கு லதுபுற அட்ரீனல் சுரப்பியில் பியோக்ரோமோசைட்டோமா இருப்பது கண்டறியப்பட்டது. சிறுநீர்ப் பரிசோதனையில் இந்த பாதிப்பானது உறுதி செய்யப்பட்டது இதற்கு லேப்ரோஸ்கோபிக் முறையில் கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்து அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

முகிலா என்ற இந்த சிறுமிக்கு செய்யப்பட்ட இந்த லேப்ரோஸ்காபிக் அறுவை சிகிச்சை செயல்முறை பற்றி பேசும்போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்க கூடிய நிகழ்வு என்று குறிப்பிட்டனர். கட்டியின் அளவு மிகப் பெரியதாக இருந்தால் மற்றும் நோயாளி அதிக உடல் பருமன் கொண்டவராக இருந்தால் லேப்ராஸ்கோபிக் முறையில் அதை அகற்றுவது என்பது ஒரு சரியான அணுகுமுறையாக இருப்பதில்லை. 6செ.மீக்கும் அதிகமான உள்ள கட்டிகளுக்கு வழக்கமாக செய்யப்படும் திறந்தநிலை அட்ரினலேக்டமிமுறையே சிறந்த தேர்வாக இருக்கிறது ஆனால் நோயாளி எடை 76 கிலோ என மிக அதிகமாக இருந்ததோடு கட்டியின் அளவு 14*10 செ.மீ என்பதாக இருந்தது இந்த சூழ்நிலையில் லேப்ராஸ்கோபிக் முறைகளில் அட்ரினல் சுரப்பியில் இருந்த கட்டியை அகற்றும் சிகிச்சைமுறை செய்யப்பட்டது.இதன் தனித்துவத்தை உணர்த்துகிறது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து இந்தத் துல்லியமான சிகிச்சை திட்டம் வகுக்கப்பட்டது. குடல் இரைப்பை அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் ரமேஷ் அர்த்தனாரி நக்ஷ டாக்டர் மோகன், டாக்டர் சீனிவாசன் ,ஜெகதீசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களது அனுபவமாக செயல்திறனும் ஒருங்கிணைந்து இந்த நோயாளிக்கு சிறப்பான சிகிச்சை பலனைப் பெற்றுத் தருவதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது இப்போது முழுமையாக பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். தினசரி நடவடிக்கைகளை இப்போது செய்ய முடிகிறது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: