மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகளில் பி ரதியெடுக்கும் பணி தொடக்கம்:

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் பணி துவக்கம்.!!*

மதுரை:

மதுரை மீனாட்சி சுந்ததரேசுவரர் கோயிலில், கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் பணிகளில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோவிலின் உள்பிரகாரம்,
இரண்டாம் பிரகாரம்,அம்மன் சந்நிதி, சுவாமி சன்னிதி உள்பட கோயிலுக்குள் பாண்டியர் காலத்தில் பொறிக்கப்பட்ட 410க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளனர்.
இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் படித்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளவற்றை அறிக்கையாக தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு நடைபெற்றது.
இதில் ,தொல்லியல் நிபுணர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் 3 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றி கல்வெட்டுகள் அனைத்தையும் படித்து அவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை , அறிக்கையாகத் தயாரித்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது வரை, அந்த அறிக்கையை கோவில் நிர்வாகம் வெளியிட
ப்படவில்லை. இந்நிலையில், கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளவை குறித்தும், அதற்கு ஆதாரமாகவும்,
கோயில் கல்வெட்டுகளை அப்படியே பிரதியெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன,
இதில், தொல்லியல் நிபுணர் சாந்தலிங்கம் தலைமையில் கல்வெட்டியல் நிபுணர்கள் 15க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி இரண்டு மாதங்களில் முடிவடையும் என்றும், அதன் பின்னர் கல்வெட்டுகளை பிரதிகளைக்
கொண்டு ஆவணம் தயாரிக்கும் பணிகள் தொடங்கும் என்றும், கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: