மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்ரி விழா:

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்ரி விழா தொடக்கம்:

மதுரை:

நவராத்ரி விழாவையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இக் கோயிலில் நவராத்ரி விழாவானது இன்று தொடங்கி, அக். 14.ம் தேதி வரை நடைபெறுகிறது.
தினசரி மாலை நேரங்களில், அம்மன் , பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பார்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்
கிழமைகளில் , பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையதாம்.
இதேபோல, மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், பிரளயநாத சிவன், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரர், சித்திவிநாயகர் ஆலயங்களிலும், நவராத்ரியையொட்டி, அம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: