வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கில ோ கஞ்சா பறிமுதல்:

உசிலம்பட்டி அருகே வீட்டில பதுக்கி வைக்கப்பட்டிருநத 6 கிலோ கஞ்சா பறிமுதல்:
இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது:

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்
பட்டிருப்பதாக போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலீஸார் மாதரையில், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது 3 வீடுகளில், கஞ்சா விற்பனைக்காக வாங்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீஸார் மாதரையைச்
சேர்ந்த பாண்டி மகன் சூர்ய பிரகாஷ்(27). ஜெயக்குமார் மனைவி ராஜேஸ்வரி(45). வாசுதேவன் மனைவி மதுரா(42). ஆகிய இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யபபட்டனர்..
இவர்களிடமிருந்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபபட்டது.
இது குறித்து, உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: