மரக்கிளை முறிந்து விழுந்து, இளைஞர் பலி:

ஆலமரக்கிளை முறிந்து விழுந்து இளைஞர் பலி: மற்றொருவர் பலத்த காயம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஆலமரத்தடியில், கதிர் அடிக்கும் இயந்திரத்தை சரி செய்யும்போது, ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில், இளைஞர் பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பன் தட்டை கிராமம், கல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் கர்ணன் வயது 21. இவரும்,விஷ்ணு என்பவரும், அலங்காநல்லூர் அருகே கல்லணை அய்யனார் கோயில் ஆலமரத்தடியில், கதிர் அடிக்கும் இயந்திரத்தை சரி செய்து கொண்டு இருந்தனராம்.
அப்போது மரக்கிளை திடீர் என முறிந்து இருவர் மீது விழுந்ததாம்.
இதில் இருவரும் பலத்த காயமடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் கர்ணன் இன்று காலை இறந்தார். விஷ்ணு மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: