பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து ஆர்ப் பாட்டம்:

பிரியாங்க காந்தி கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில், பிரியங்கா காந்தி கைது செய்ததைக் கண்டித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகளின் போராட்டத்தின் போது ,மந்திரி மகனால் கார் ஏற்றி ஒருவர் இறந்தார். சிலர் காயம் பட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று பார்க்கச் சென்ற காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்தனர். இதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்எஸ் குருசாமி தலைமை தாங்கினார் .தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் வருசை முகமது தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிவண்ணன் மனித உரிமைகள் துறை வட்டாரத் தலைவர் லெட்சர் கான், ராஜீவ் காந்தி, பஞ்சாயத்து ராஜ் வட்டாரத் தலைவர் மணி அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் கிராம கமிட்டித் தலைவர் சோலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் வட்டார தலைவர் முகமது இலியாஸ், கிராம கமிட்டித் தலைவர் நாராயணன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலாளர் புரோஸ்கான், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரத் செயலாளர் கணேசன், கண்ணையா மாரி, சந்தனம் ,பாக்கியம் ராஜ் ஆகியோர் பிரியங்கா கைது செய்ததை கண்டித்து பேசினார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: