தொழில் வரி தொடர்பான ஆட்சேபனை இருந்தால் த ெரிவிக்கலாம்: மாநகராட்சி ஆணையர்:

மதுரை மாநகராட்சி
நிர்ணயம் செய்யப்பட்ட தொழில்களுக்கான உரிமயாணைக் கட்டணம் குறித்து ஆட்சேபணைகள் இருப்பின் தெரிவிக்கலாம்: ஆணையாளர்:

மதுரை:

மதுரை மாநகராட்சி மூலம், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் தொழில்களுக்கான உரிமக் கட்டணம், நிர்ணயிக்கப்பட்ட தொழில் நடத்துபவர்களுக்கு சுகாதார பிரிவு மூலம் தொழில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந் நேர்வில் 01.04.2009-ல் வ.எண்.1 முதல் 135 வரையுள்ள இனங்களுக்கு மாமன்ற தீர்மானம் பெறப்பட்டு தொடர்ந்து வசூல் செய்யப்பட்டு வருகின்றது. தற்போது ,சில வணிக நிறுவனங்களின் கோரிக்கையின்
படியும், நீதிமன்ற வழக்குகள் அடிப்படையிலும், விடுபட்ட இனங்கள் குறித்து சென்னை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளின் நடை முறைகளை பரிசீலனை செய்ததன் அடிப்படையிலும், விடுபட்டுள்ள இனங்களை சேர்த்தும், ஒரு சில இனங்களை சீரமைத்தும் வ.எண்.136 முதல் 176 வரையிலான இனங்களுக்கு தொழில் உரிமக் கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்ய மாமன்றத் தீர்மானம் எண்.1089, நாள் 29.07.2021 –ன்படி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விரிவான பட்டியல் மதுரை மாநகராட்சி, இணையதளத்தில் வெளியிடப்
பட்டுள்ளது.
இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, தொழில்களுக்கான உரிமயாணைக் கட்டணம் குறித்து ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் அறிவிப்பு செய்த நாளிலிருந்து 15 தினங்களுக்குள் எழுத்து மூலமாக மாநகர் நல அலுவலர், மதுரை மாநகராட்சி, அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம் மதுரை – 2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், கேட்டுக் கொள்ளப் படுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: