மக்கள் குறைதீர்க்கும் நாள்:

மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

மதுரை:

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர், தலைமையில் இன்று (04.10.2021) நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வாரந்தோறும் திங்கள்கிழமை களில் ,மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேலும், பெறப்பட்ட தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர், அறிவுறுத்தினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 770 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
மேலும், 2 மாற்றுதிறனாளிகளுக்கு சிறுதொழில் செய்வதற்காக வங்கி கடன் மானியம் 1 பயனாளிக்கு ரூபாய் 25 ஆயிரம் என 2 பயனாளிக்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையையும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த .
பழனி என்ற மாற்றுத்திறனாளி மூன்று சக்கர நாற்காலி வேண்டுமென்று மனு அளித்ததைத் தொடரந்து அந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவருக்கு மூன்று சக்கர நாற்காலியையும் மாவட்ட ஆட்சித் தலைவர்
மரு.அனீஷ்சேகர், வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்
கோ.செந்தில்குமாரி , மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்
ராஜ்குமார் , மாற்றுத்திறனாளி நல அலுவலர்
ரவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: