சிலம்பு பயிற்சி பெற்றவர்களுக்கு பரிசு வ ழங்கும் விழா:

சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா

மதுரை:
மதுரை மாவட்டம்,
உசிலம்பட்டி விஷன் பவுண்டேசனில், சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு ,விஷன் பவுண்டேசன் தலைவர் வழக்கறிஞர் பொன்ராம் தலைமை தாங்கினார்.
திட்ட இயக்குனர் செல்வராணி வரவேற்று பேசினார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர் பாரதி மற்றும் எழுமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிப் பேசினர். சிலம்பம் மாஸ்டர் பொன். ராகேஷ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை, விஷன் பவுண்டேசன் இந்தி ஆசிரியை பொன். அக் ஷயா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: