போலீஸாரை மிரட்டியவர் கைது:

ஆயுதங்களுடன் போலீசை மிரட்டிய கொலை கைதி கைது :

சோழவந்தான்: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆலோசனை
யின்பேரில், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சோழவந்தான் பகுதியில் ரவுடிகளை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முள்ளிப்பள்ளம் அருகே போலீசார் சென்று கொண்டிருந்த பொழுது, தென்கரையைச் சேர்ந்த சரவணபெருமாள். வயது 19. போலீசாரிடம் தகராறு செய்து ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக சரவண பெருமாளை கைது செய்தும், அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பகுதியில்,
வழிப்பறி செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது பேரில், வழிப்பறியில் ஈடுபட்டு கொண்டிருந்த முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ், வயது 19. என்பவரை கைது செய்து அவரிடமிருந்து அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர் .
காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: