சாலை சீரமைக்கப் படாததால்: பொதுமக்கள் அவத ி:

விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கிராமத்தில்: பாதியில் நிற்கும் தார்சாலை பொதுமக்கள் அவதி:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம், முதலைக்குளம் கருப்பு கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக் கோவிலுக்கு, மதுரை தேனி திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி சென்று வருகின்றனர். இக் கோவிலுக்கு, நடுமுதலைக்குளம் பஸ் நிலையத்திலிருந்து மெயின் ரோடு கண்மாய் கரையில் உள்ளது.
கடந்த ஆண்டு இந்த ரோடு சேதமடைந்ததால், புதிதாக சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஏற்பாட்டின் சுமார் 30 லட்சம் செலவில் ரோடு புதிதாக போடுவதற்கு டெண்டர் விடப்பட்டது. இதற்கான பூர்வாங்க வேலை நடந்துள்ளது. முழுமையாக ரோடு போடுவதற்கு ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு மாதங்களாக ஏற்கெனவே, இருந்த ரோட்டை பெயர்ந்து போட்டுள்ளதால் அந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையாக சாலையை அமைத்து
கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, ஒன்றியக் கவுன்சிலர் அரவிந்தன் கூறும்பொழுது: இப்பகுதிக்கு மட்டுமல்ல, பல்வேறு மாவட்டத்திற்கும் துடியான தெய்வம் கருப்பு கோவில் இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு வரக்கூடிய மெயின் ரோடு, இப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தக்கூடிய ரோடும் சேதமடைந்திருந்தது. எங்கள் பகுதி கிராம மக்களுடைய கோரிக்கையை ஏற்று, புதிதாக ரோடு போடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தனர். சுமார் நான்கு மாதகாலமாக ஏற்கெனவே, இருந்த ரோடு தோண்டி போட்டுபுதிதாக போடாததால், இப்பகுதியில் வரக்கூடியவர்கள் விபத்துக்கு உள்ளாகி சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து கருப்பு கோவில் வழியாக செல்லக்கூடிய இந்த ரோட்டை முழுமையாக போட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல், இவ்வழியாக வந்த கொக்குளம் வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் 35 ஆட்டோ டிரைவர் முதலை குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குஅடிக்கடி வந்து செல்கிறார் இவர் கூறும் பொழுது இந்த ரோடு தோண்டி போட்டு நான்கு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது இதில் எந்த நேரத்தில் விபத்து ஆகுமோ என்று உயிர் பயத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறோம் ஆகையால் அரசு நடவடிக்கை எடுத்து உடனே இந்த ரோடை முழுமையாக போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்
இதேபோல், குடும்பத்தலைவி மாலதி வயது 30. கூறும்பொழுது: தற்போது ,புரட்டாசி மாதம் எங்கள் கிராமத்தில் திருவிழா நடக்கிறது. அதற்கு ,தீச்சட்டி எடுப்பதற்கு குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தோம். சரியான நேரத்தில் கோவிலுக்கு வந்து எங்களது நேர்த்திக்கடனை செலுத்த முடியாத அவல நிலையில் காலதாமதமாக சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: