மதுரையில் சிவாஜி கணேசன் பிறந்த நாள்:

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை அமைக்க கோரி சிவாஜி ரசிகர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை:

மதுரை:

மதுரை சினிமா துறையில் தனக்கான பாணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படங்கள் நடித்து வந்தார். அவரது ,93 -வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் நடிகர் திலகம் சிவாஜி சிலைக்கு அகில இந்திய சிவாஜி மன்ற செயலாளர் முருக விலாஸ் நாகராஜன் தலைமையில், காந்தி சிலை அரவணைப்பு குழுத் தலைவர் சாமிக்காளை ஆகியோர் தலைமையில், சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் ,மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் மக்கள் செய்தி தொடர்பாளர் ஆசிரியத்தேவன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதேபோல் ,சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ,சிவாஜி சிலை அருகே மரக்கன்றுகள் நட்டனர்.
ஜனா தளம் கட்சி சார்பில், அதன் மாவட்ட த் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை மற்றும் பல்வேறு சிவாஜி ரசிகர்கள் பிரபு ரசிகர்கள் விக்ரம் பிரபு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவிக்கு மரியாதை செலுத்தினர்.
சிவாஜி ரசிகன் என்ற முறையில் ஆசிரியத்தேவன் செய்தியாளர் கூறும்போது: சென்னையில் உள்ள மெரினா கடற்கரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது சிலையை நிறுவப்பட வேண்டும்.
தற்போது, நடைபெற்ற திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலையிட்டு நடிகர் சிவாஜி கணேசன் சிலை அமைக்கக்கோரி நாங்கள் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல்,
மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை சங்கத்தின் நிறுவனர் ஆறுமுகம் பிள்ளை மாலை அணிவித்தார்.
திருக்குமரன் மற்றும் அன்னலட்சுமி கணேசன் உடன் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: