லஞ்சம் பெற்ற வட்ட விநியோக அலுவலர் மீது து றை ரீதியாக நடவடிக்கையா?

தற்காலிக ரேஷன் கடை ஊழியரிடம் லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி கைது

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தாலுகா பகுதியில், கூட்டுறவு சொசைட்டி உட்பட்ட 92 நியாயவிலைக் கடைகள் உள்ளன . இந்தக் கடைகளில் தற்காலிக ஊழியர்கள் உட்பட 45 பேர் பணிபுரிந்து வருகின்றனர் . இவர்களிடம் இருந்து, மாதம் தோறும் 1000 முதல் 2000 வரை வட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி ( வயது 53 ) லஞ்சம் பெற்றுள்ளார் .
இது குறித்து, ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில், எஸ்ஐ குமரகுரு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட போலீசார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் .
இரண்டு மணி நேரம் நடத்திய தீவிர சோதனையில், வட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி இடம் கணக்கில் வராத 51 ஆயிரம் இருந்துள்ளது . இதனை கைப்பற்றிய போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கைது செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: