மதுரையில், தொழில் பழகுவதற்கு நேர்காணல்:

தொழிற் பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, தொழில் பயிற்சி பழக சேர்க்கை:

மதுரை:

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், தொழிற் பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழில் பழகுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோ. புதூரில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், 2017, 18, 19-ம் ஆண்டுகளில், தொழிற்பயிற்சி முடித்தவர்கள், தொழில் பழகுவதற்காக , அக். 4-ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இன்டர்வியூக்கு வருபவர்கள், தேர்ச்சி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம், ஆகியவற்றுடன், அக். 4.ம் தேதி, மதுரை கோ.புதூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், காலை 10 மணிக்கு ஆஜராகலாம்.
தொழில் பழகுநருக்கு தேர்ந்து எடுக்கப்படுவோருக்கு, மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்.
அத்துடன், பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: