திருமங்கலம் அருகே அரசு பஸ் விபத்து: சாலை யை குறுக்கிட்டவர் பலி:

அடையாளம் தெரியாத நபர் சாலையில் குறுக்கிட்டதால், அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: குறுக்கே வந்த நபர் விபத்தில் பலி:

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் ரோட்டில், கன்னியாகுமரியில்- இருந்து வேலூருக்கு 18 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, திருமங்கலம் ராயபாளையம் விலக்கில் வந்து கொண்டி
ருக்கும்போது, ரோட்டின் குறுக்கே ஒருவர் சென்றராம். அவர் மீது பஸ் மோதி பஸ் நிலை தடுமாறி பஸ் பள்ளத்தில் இறங்கியது.
சம்பவ இடத்துக்கு, விரைந்த திருமங்கலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய அவர்களை பத்திரமாக மீட்டனர். குறுக்கே சென்ற நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
பஸ்சில் பயணம் செய்த, 18 பயணிகள் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அனைவரையும், மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: