அக்.2-ல் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சிய ர்:

காந்தி ஜெயந்தி தினமான 02.10.2021 (சனிக்கிழமை)-அன்று
மதுரை மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில்
உள்ள தேர்தல் நடைபெறும் கிராம ஊராட்சிகள் தவிர இதர ஊராட்சிகளில்
கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல்:

மதுரை:

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 உட்பிரிவு 3-ல் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 4 தினங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்திட கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வருகின்ற காந்தி ஜெயந்தி தினமான 02.10.2021 (சனிக்கிழமை)-அன்று மதுரை மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள தேர்தல் நடைபெறும், கிராம ஊராட்சிகள் தவிர இதர ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் செய்துள்ளனர். கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அலுவலரை பற்றாளராகவும், உதவி இயக்குநர் நிலையில் பணிபுரியும் மண்டல அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இக்கிராம சபைக் கூட்டத்தை திட்ட இயக்குநர் மாவட்ட வருவாய் அலுவலர் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மற்றும் உதவி ஆட்சியர் நிலையிலான வருவாய்த்துறை அலுவலர்களும் கண்காணிக்க உள்ளார்கள்.
இக் கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி நிதி செலவினம் கொரோனா பெருந்தொற்று தடுப்பூசிகள் அவசியம் குறித்து விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல்இ மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் ஊராட்சிப்
பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல் மக்கள் திட்டமிடல் இயக்கம் ஊட்டச்சத்து இயக்கம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துதல் விரிவான கிராம சுகாதார திட்டத்தைப் பற்றி விவாதித்தல் தூய்மைக் கணக்கெடுப்பு ஊரகம்-2021 குறித்து பொது மக்களுக்கு விவாதித்தல், மின் சிக்கனம் ஜல் ஜூவன் திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து, இக் கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்
படவுள்ளது.
எனவே, இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: