பஸ் மின் கம்பத்தில் மோதி விபத்து:

மதுரை ரயில் நிலையம் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து: மின்கம்பத்தில் மோதி விபத்து:

மதுரை:

மதுரை பழங்காநத்தத்தில் இருந்து ,எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த மாநகர் அரசு பேருந்து, மதுரை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தால், சாலை ஓரத்தின் நடைபாதை மேடையில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து, பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், சம்பவஇடத்திற்கு வந்த மதுரை திடீர்நகர் போக்குவரத்து போலீசார் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்து, பேருந்தை மீட்டு பணிமனைக்கு அனுப்பி வைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, பேருந்து மோதியதில் மின்கம்பத்தில் இருந்த வயர்கள் மற்றும் அரசு கேபிள் வயர்கள் அறுந்து கிடைந்தவைகளை ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: