திருப்பரங்குன்றம் கோவில் பணியாளர்களு
க்கான பல்நோக்கு மருத்துவ முகாம்:
மதுரை:
ஆறுபடைவீடுகளில் முதல் படைவீடான, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில், வேலம்மாள் மருத்துவமனை சார்பாக பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், கோயில் நிர்வாகிகள், ஊழியர்கள், ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட்ட 300க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த அழுத்தம் பரிசோதனை. சர்கரை நோய் பரிசோதனைகள் உள்பட இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.