மதுரை நகரில், மத்திய அரசைக் கண்டித்து, தி முக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மறியல்:

மதுரை ரயில் முன்பு, மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல்: தொழிலாளர்கள் கைது:

மதுரை:

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, மதுரை ரயில் நிலையம் முன்பாக, திமுக கூட்டணிக் கட்சிகள் மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், காஸ், விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல், பொதுத்துறைகளை, தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதைக் கண்டித்தும், திமுக கூட்டணி கட்சி தொழிற் சங்கங்களான எல்.பி.எப்., ஐஎன்டியூசி, ஹெச்.எம்.எஸ். சிஜடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில் தொழிலாளர்கள், மதுரை ரயில் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டபோது, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னதாக, மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: