மதுரையில், பெட்ரோலிய விலை உயர்வை தடுக்கக ் கோரி சாலை மறியல்:

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, தனியார் மயமாக்குதலைக் கண்டித்து மறியல்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் ,மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், பொதுத் துறையை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து, 300 -க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் , சி.பி.ஐ. மாவட்ட ச் செயலாளர் காளிதாஸ், சி.பி.எம்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஓன்றியச் செயலாளர் ஆதனூர் குமரேசன் ,விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டச் செயலாளர் செல்வ அரசு,
காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் ரும், கல்லணை ஒன்றியக் கவுன்சிலர் ரும்மான சுப்பா ராயலு, ஜெயமணி, சரந்தாங்கி முத்து, உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: