குடும்பத்துடன் குல தெய்வத்தை வழிபட்ட, தம ிழக நிதியமைச்சர்:

குல தெய்வம் கோயிலில் நிதியமைச்சர் குடும்பத்துடன் வழிபாடு:

சோழவந்தான்:
மதுரை மாவட்டம்,
சோழவந்தானில் உள்ள குலதெய்வம் கோவிலில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
குடும்பத்துடன்
பூஜைகள் செய்து, வழிபட்டனர்.
சோழவந்தான் மேலரதவீதி அங்காளஈஸ்வரி சமேத, வால குருநாதர்கோவில் உள்ளது. இக் கோவில் பிடிஆர் பழனிவேல்ராஜன் குடும்பத்தின் குலதெய்வம் கோவில் ஆகும்.
தமிழக அரசின் அமைச்சரவையில் பிடிஆர் தியாகராஜன் நிதி அமைச்சராக உள்ளார்.
அமைச்சர் ஆன பிறகு, முதல்முறையாக தனது குல தெய்வம் கோவிலுக்கு மனைவி,மகன்கள் ஆகியோருடன் வந்தார். பரம்பரை பூசாரி சிவகணேசன், பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல், கோவில் மரியாதை செய்தார்.
பார்வர்ட் பிளாக்கட்சி நிர்வாகி தர்மராஜ்,தெற்குரதவீதி மேலரதவீதி வெள்ளாளர் உறவின்முறை நிர்வாகி அருணாசலம், நகரதிமுக துணைச்
செயலாளர் சிற்றரசு,முன்னாள் கவுன்சிலர் ஜெயராமன்,
பிஆர்சி கண்ணன் ஆகியோர் நிதியமைச்சர் தியாகராஜனை வரவேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: