அறந்தாங்கி அருகே நற்பவளக்குடியில் சாலை ப்பணி தொடக்கம்

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நற்பவளக்குடியில் சாலைபணி தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி தலைமை வகித்தார்.ஊராட்சிதலைவர் மணிமொழியன் பிடிஒ அசோகன் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழக சுற்றுசூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ரூ.32 லட்சம் மதிப்பிலான சாலைப்பணிகளை மெய்யர்கோயில் பகுதியில் இருந்து நற்பவளக்குடி பெரிய ஏரிவரையிலான பணிகளை தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.விழாவில் நிர்வாகிகள் நல்லக்கூத்தன்,கருணாநிதி,கவுன்சிலர் செந்தமிழ்செல்வன்,ஊராட்சி துணை தலைவர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: