அறந்தாங்கியில் பிரதமர் பிறந்தநாள் விழா த ிருவிளக்கு பூஜை

அறந்தாங்கி ராசேந்திரசோழீஸ்வரர் கோயிலில் பாஜக மகளிரணி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை தொகுதி பாஜக மகளிர் அணி சார்பில் பிரதமரின் 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 71 மகளிர்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜைக்கு
மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா தலைமை‌ வகித்தார்.நகர தலைவர் இளங்கோவன் நிர்வாகிகள் ரங்கையா ஜெயபாண்டியன் ரமேஷ் பாபுராஜ்
தாமரைசெல்வன்.ரெங்கையா,வீரமாகாளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான மகளிர் சமுக இடைவெளியுடன் கலந்து கொண்டு அரசின் கரோனா விதிப்படி திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் இதில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சக்தி குமரன் நிர்வாகிகள் சிவசந்திரபிரபு ஐயப்பன் செந்தில்குமார் நகர மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி ஆதிசேசன் சுந்தரலிங்கம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகான ஏற்பாட்டை மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனிமொழி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுகுணா நகர துணை தலைவர் சுவர்ணலதா ஆகியோர் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: