சோழவந்தான் பேரூராட்சியில் துப்புரவு பணி முகாம்:

சோழவந்தான் பேரூராட்சியில் மெகா தூய்மைப் பணி முகாம்:

சோழவந்தான்:

மழைக்காலம் தொடங்குவதால் அரசு ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் மெகா தூய்மைப் பணியினை கடந்த 20ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தூய்மைப் பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம் மற்றும் சோனை திலீபன் சக்கரவர்த்தி பணியாளர்கள் பூவலிங்கம், அசோக், சந்தோஷ் உள்ளிட்ட பணியாளர்கள் தூய்மை பணியினை மேற்கொண்டனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள் மற்றும் அடைப்பு ஏற்பட கூடிய பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். கச்சிராயிருப்பு பாதை, வட்ட பிள்ளையார் கோவில், பேட்டை வைகை ஆற்றுப் பகுதி, வைகை ஆற்றின் கரையோர பகுதி, பேரூராட்சியின் விரிவாக்க பகுதிகளான, பசும்பொன் நகர் ,ஆர் எம் எஸ் காலனி ஆகிய பகுதிகளில் மெகா தூய்மைப் பணியினை, பேரூராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: