காஸ் விலை உயர்வு: காங்கிரஸார் ஆர்ப்பாட்ட ம்:

அலங்காநல்லூரில் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர், செப்.21-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாரதிதாசன் தெருவில் வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு வட்டார தலைவர் சுப்பாராயலு தலைமை தாங்கினார். வடக்கு வட்டார தலைவர் காந்தி, மனித உரிமை மாவட்ட தலைவர் ஜெயமணி, மனித உரிமை வட்டார தலைவர் சரந்தாங்கி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் வேலாயுதம், நிர்வாகிகள் தனுஷ்கோடி, முரளி பாலமுருகன், தவமணி, ஆதனூர் அய்யங்காளை, கிருஷ்ணமூர்த்தி, மகளிரணி பார்வதிஅம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்தும், உயர்ந்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், 3 வேளாண் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: