பூங்கா முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும ் பணி:

மதுரை மாநகராட்சி அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி :ஆணையாளர் ஃ தனி அலுவலர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது:

மதுரை:

மதுரை மாநகராட்சி அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் திருக்கோவில், உண்டியல் எண்ணும் பணி ஆணையாளர் ஃ தனி அலுவலர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி இராஜாஜி பூங்கா அருகே அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்
திருக் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழி படுகின்றனர். இக் கோவிலில், வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில், கோவில் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்து 19 காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது, உதவி ஆணையாளர் (வருவாய்)
ரெங்கராஜன், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர்
இராமசாமி, மக்கள் தொடர்பு அலுவலர்
மகேஸ்வரன், மேலாளர் மற்றும் பேஸ்கார்
குமரேசன்,
மீனாட்சிசுந்தரம்,
சரவணன், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: