திருப்பரங்குன்றம் அருகே பட்டா வழங்கும் வ ிழா: நிதியமைச்சர்:

திருப்பரங்குன்றம் தொகுதியில் பட்டா வழங்கும் விழா:

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், ஜே. ஜே. நகர் காட்டு நாயக்கர் குடியிருப்பு பகுதியில் ,கடந்த பல ஆண்டுகளாக பட்டா கேட்டு கோரிக்கை வைத்த பழங்குடியினர் குடும்பத்தினருக்கு, வீட்டு மனை பட்டா ,அரசு நலத்திட்ட உதவிகள்,கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு ஆகியவற்றை
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ,
வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி,
மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ,மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ,மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி ஆகியோருடன் இணைந்து வழங்கினார்.
"கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக தவித்து வந்த இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு விடியல் தரும் வண்ணம் கோரிக்கை வைத்த ஒரு வார காலத்திற்குள் இந்த நலத்திட்ட உதவிகளை, முதல்வர் வழிகாட்டுதல் படி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முழு முயற்சி எடுத்து நிறைவேற்றி தந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: