பிரதமர் மோடி பிறந்த நாள்: சிறப்பு யாகம்:

அலங்காநல்லூரில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி அன்னதானம்

அலங்காநல்லூர், செப்.18-

பாரத பிரதமர் நரேந்திர மோடி 71வது பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை, கலைவாணர் நகரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பொது செயலாளர் கோவிந்தமூர்த்தி, மீனவரணி மாநில செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊடகப்பிரிவு ராஜதுரை, சுரேஷ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் உள்ள கிளைகளில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: