செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித் து ஆர்ப்பாட்டம்:

*சன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.*

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட சன் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் குமரேசன் மற்றும் கணேசன் என இரு செய்தியாளர்கள் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர்.

அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் காசிலிங்கம் தலைமையில், தலைவர் ஜெகநாதன் முன்னிலையில் மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட செய்தியாளர்கள் ஒருங்கிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும்., முன் களப்பணியாளர் அறிவிக்கப்பட்ட செய்தியாளர்களை பல்வேறு இடங்களில் செய்தி சேகரிக்கும் பணியின்போது தாக்கப்படுவதை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப் பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான செய்தியாளர்கள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: