வெடி விபத்து ஒருவர் சாவு:

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பலி.
சட்டவிரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு காயமடைந்த 8 பேர் மீதும் வழக்கு…..

சாத்தூர் :

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி பகுதியில் நேற்று, பாலமுருகன் (30) என்பவர் வீட்டில் வைத்து, சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாலமுருகன் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனலிக்காமல், சண்முகராஜ் (52) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாயில்பட்டி விஏஓ ரவிராஜ் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பாலமுருகன், செல்வி, முத்துசெல்வி, முத்துமுனீஸ்வரி, சீதாலட்சுமி, செல்வமேரி, சுகந்தி, முத்துராஜ் ஆகிய 8 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: