விநாயகர் சதுர்த்தி விழா:

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வீட்டிலேயே கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா:

மதுரை:

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பொது
இடங்களில், விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதித்துள்ளது. எனினும், வீட்டிலேயே கொண்டாட வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அவரவர்கள் இல்லத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். அதிகாலையில் எழுந்து விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை அவல் பொரி, வடை, அப்பம், இட்லி, முக்கனிகள், பால் பருப்பு பாயசம் உள்ளிட்ட படையல்கள் வைத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர் .
மேலும் ,பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தினால், கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர் .
சிறிய பிள்ளையார் கோயில்களில், சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.. தமிழக அரசின் வழிகாட்டல் நெறிமுறை படி இந்த ஆண்டு எந்த இடத்திலும் விநாயகர் சிலை வைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: