ஏ.டி.எம்.மிலில் பணம் கொள்ளையடிக்க முயற்சி:

ஏ.டி.எம்.மில் கொள்ளை அடிக்க முயன்று இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு: கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை தீவிரமாக தேடும் போலீஸ்:

மதுரை:

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில், அமைந்துள்ள அரசுடமையாக்
கப்பட்ட வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக வங்கி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தை பார்க்கும்போது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு, இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்த பொழுது அப்பொழுது, ஒரு இளைஞர் ஏடிஎம் எந்திரத்தை உடைப்பதும், கண்காணிப்பு கேமராவில் சாயம் பூசி மறைப்பதையும் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பது பதிவாகியுள்ளது. இதுகுறித்து, வங்கி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்து மற்றும் சிசிடிவி காட்சி களையும் கொடுத்தனர். சிசிடிவி காட்சி ஆராய்ந்தபோது, ஒரு இளைஞர் எந்திரத்தை உடைப்பதும் பணம் எடுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததும் தெரியவந்தது. சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: