மதுரை கொரோனா மருத்துவமனையில் 7 லட்சம் மதிப்பிலான பொருள் திருட்டு : வழக்குப் பதிவு

மதுரை:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் உள்ள கொரோனா பிரிவில் உள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், எல்.இ.டி. திரை போன்ற பொருட்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அரசு ராஜா ஜி மருத்துவமனையில், உள்ள கொரோனா சிறப்பு பிரிவு வளாகத்தில் இருந்த ஏழு லட்ச ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் எல்.இ.டி. திரை, மின்சாதன பொருட்கள் திருடப்பட்டது.
இது குறித்து , மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருடியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: