விளைபொருட்
களுக்கு
உரிய விலை கோரி
பாரதிய கிசான் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்:
மதுரை :
விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மதுரை மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில தென்னை விவசாய அணி தலைவர் சோணை முத்து முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் வரவேற்றார். விவசாய விளைபொருட்
களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை மாவட்ட விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.