கோவில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்:

முகூர்த்த நாள் என்பதால், கோவில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் :
காவல்துறை அறிவிப்பு உதாசீனம் செய்யும் பொதுமக்கள்:

அறுபடை வீடுகளான முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், இன்று முகூர்த்த நாள் என்பதால், அதிக அளவு திருமணங்கள் நடைபெற்று வருகிறது. திருமணத்துக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாய் இருப்பதால், நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை ஒலிபெருக்கி மூலமாக சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் முக கவசம் அணிந்து வாருங்கள் என அறிவிப்பு செய்தாலும், அதை உதாசீனம் செய்யும் வகையில், பொதுமக்கள் நடந்து கொள்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதனால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் விழிப்புடன் இல்லை என்றால், கொரோனா நோய் தொற்று ஒழிக்க முடியாது என வேதனையுடன் தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: