கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் இரங்கல்

அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரும், தமிழுணர்வு கொண்ட கவிஞருமான புலவர் புலமைப் பித்தன் உடலநலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அதிமுகவை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவரான புலமைப்பித்தன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இப்போது வரை நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியவர். தமது பாடல்களில் தமிழை வீழச் செய்யாமல் வாழ வைத்தவர். அதனால் புலவர் புலமைப்பித்தனை எனக்கு பிடிக்கும். அதையும் கடந்து ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டவர். அதற்காக பல முன்முயற்சிகளை மேற்கொண்டவர் புலமைப்பித்தன்.

புலமைப்பித்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • மருத்துவர் ராம்தாஸ்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: