புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் யூனியனில் மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு சார்பில் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உரிய வேலை ஏற்பாடுசெய்ய தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள விபரங்களுக்கு பயிற்சி நடந்தது.பயிற்சிக்கு ஒன்றிய சேர்மன் உமாதேவி தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார்.உதவி திட்ட அலுவலகர் அமுதா,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்,வட்டார இயக்க மேலாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியில் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ஆனந்த் ஊராட்சி தலைவர்களிடம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எந்த வகையில் வேலை வாய்ப்பினை உருவாக்கலாம் என்பது குறித்து பேசினார் இப்பயிற்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தி முத்துலட்சுமி ஜோதி கவிதா ஞானம் டென்னிஸ் உமாமகேஸ்வரி சத்யா சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோயிலில் ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
