அறந்தாங்கியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிராண்ட் பைக்கர்ஸ் ரைடிங் கிளப் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த பேரணியை அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார் தலைமை வகித்து வாகன ஒட்டி ஒருவருக்கு ஹெல்மேட் வழங்கி தொடங்கிவைத்தார்.பயிற்சி டிஎஸ்பி பாஜினாபீவி இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் கிளப் தலைவர் தாமரைசெல்வன்,செயலாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர்.
ஹெல்மேட் பேரணி அறந்தாங்கி போலீஸ்நிலையத்தில் தொடங்கி பேராவூரணி சாலை,பஸ் ஸ்டாண்ட் அண்ணாச்சிலை,கட்டுமாவடி முக்கம்,எம்ஜிஆர் சிலை,பெரியகடைவீதி புதுக்கோட்டை ரோடு வழியாக சென்று செக்போஸ்டில் நிறைவடைந்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: