தேசிய நாய் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு நாய்களுக்கு கேக் வெட்டியும்,உணவுகள் வழங்கி கொண்டாடிய இளம்பெண்:
மதுரை:
மனிதர்களுக்கு துணையாக மட்டுமில்லாது, பாதுகாப்பாகவும் இருந்துவரும் நன்றியுள்ள வாயில்லா ஜீவனான நாய்களைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வைப் ஏற்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 26-ம் தேதியன்று தேசிய நாய் வளர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை எடுத்துரைக்கும் வகையில், மதுரை சூர்யாநகர் பகுதியை சேர்ந்த நட்சத்திரா என்ற இளம்பெண் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து நாய்களுக்கு கேக் வெட்டி கொண்டாடி கேக்குகளை நாய்களுக்கு ஊட்டி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சூர்யாநகர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவுகளை வழங்கியதோடு, நாய்களுக்கு ஒளிரும் பட்டைகளை (ரிப்ளக்ட் காலர்) கழுத்தில் அணிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாய்களுக்கு வயிற்றில் உள்ள பூச்சி கோளாறுகளை நீக்கும் மாத்திரைகளை வழங்கினா்.
நட்சத்திரா குடும்பத்தினர் சர்வதேச நாய் வளர்ப்பு தினத்தினை கேக் வெட்டி கொண்டாடியதோடு, நாய்களுக்கு உணவு வழங்கிய நிகழ்வுகள் குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுதல்களை பெற்றுவருகின்றனர்.