வேன் டிரைவரை தாக்கியதாக ஐந்து பேர் மீது வழக்கு:

விபத்தை
ஏற்படுத்திய வேன் டிரைவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு:

அலங்காநல்லூர்:

பெரிய ஊர்சேரி கிராமம் முனீஸ்வரன் வயது 3.
என்ற சிறுவன் சாலையைக் கடக்க முயன்றபோது, கொய்யாப்பழம் ஏற்றி வந்த வேன் மோதி, தலையில் சிறிய காயம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் வேனில் வந்த டிரைவரையும், கொய்யாபழம் ஏற்றிவந்த விவசாயி முடுவார்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் 45. என்பவரையும், தாக்கியதில், விவசாயிக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குவிந்த தகவல் காவல்துறைக்கு கிடைத்தது .
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதால், பெரிய அளவில் பிரச்சினை நடக்காமல் தடுக்கப்பட்டது. இதன் பேரில், விவசாயியை தாக்கிய ராஜேஷ்கண்ணன்-24., பூசகருப்பு-19., விஜய்-27, மகாராஜன்-38, முத்துப்பாண்டி-20, ஆகிய 5 பேரை கைது செய்து வழக்கு ப்பதிவு செய்யப்பட்டது. சிறுவனை மீது மோதிய வேன் டிரைவர் ஜெகதீசன் வயது 28. என்பவர் மீது வாகன விபத்து வழக்கு பதியப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: